பிக்குவை ஏமாற்றிய 71 வயது மூதாட்டி..! கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கொழும்பில் ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஐந்து கோடி ரூபா பணத்தை மோசடி செய்த 71 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் தனக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தேரருக்கு கொடுப்பதாக கூறி குறித்த அவரிடம் இருந்து இந்த பணத்தை பெற்றுள்ளார்.
களனி பிரதேசத்தில் உள்ள விகாரையின் நிர்வாகியான தேரர் ஒருவரே இந்த இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வயோதிப பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வயோதிப பெண் களனி கொனவல, செலுவில பிரதேசத்தில் வசிப்பதாகவும் கடவத்தை மற்றும் கணேமுல்ல ஆகிய இடங்களில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர் எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை, பெண்ணிடம் 470 இலட்சம் ரூபா பணத்தை இழந்த பிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.