வீட்டு வேலை செய்து வந்த பெண்ணுக்கு ஒரே நாளில் அடித்த அதிஷ்டம்
கணவனின் நாளாந்த கூலித்தொழில் வருமானம் போதாத நிலையில் வீட்டு வேலைக்கு சென்று வந்த பெண்ணின் வாழ்க்கையையே மாற்றி போடடுள்ளது அதிஷ்டஇலாப சீட்டு.
இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
மகனின் மருத்துவ செலவுக்கு கூட பணமில்லை

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் புதுல் ஹரி. நடுத்தர வயது பெண்ணான இவரது கணவர் கூலி வேலைக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பெரிய அளவில் அவருக்கு வருமானமும் இல்லாத காரணத்தினால், குடும்ப சூழல் வறுமை நிறைந்தும் இருந்ததாக தெரிகிறது.
இதற்கு மத்தியில் புதுலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற சூழலில், மருத்துவ செலவுக்கும் பணமில்லாமல் தவித்து வந்துள்ளார். மறுபக்கம், மகளின் திருமண செலவுக்கும் பணம் இல்லாத நிலை இருக்க, கடுமையாக அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
வாழ்க்கையையே மாற்றிய சம்பவம்

இதன் காரணமாக, நிறைய இடங்களில் புதுல் ஹரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடன் வாங்கி இருந்தததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக சில வீடுகளிலும் புதுல் ஹரி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான், அவர்களின் குடும்ப நிலையை மாற்றும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மையில் அரசு லொட்டரி டிக்கெட் ஒன்றை 30 ரூபாய் கொடுத்து புதுல் ஹரி வாங்கியதாக தகவல் கூறுகின்றது. அப்படி இருக்கையில், அவர் வாங்கிய லொட்டரிக்கு சுமார் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக தெரிகிறது.
பயத்தில் காவல்துறைக்கு சென்ற பெண்

இதனிடையே, இவ்வளவு பணம் வென்றதால் என்ன செய்வதென தெரியாமல் பயத்தில் காவல்துறையையும் புதுல் அணுகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி பேசும் புதுல், லொட்டரியில் வென்ற பணத்தைக் கொண்டு கடனை அடைப்பதன் மூலம் நிம்மதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், மகனின் மருத்துவ செலவுக்கு அளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஒரு வீட்டை கட்டவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் தனது வேலையை விட மாட்டேன் என்றும் புதுல் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.