வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
srilanka
covid19
corona
work from home
By S P Thas
அரச சுற்று நிருபத்தின் பிரகாரம் அரச சேவையிலுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்காது வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் பிரகாரம் கர்ப்பிணி தாய்மார்களுக்க கொரேனா தொற்று ஏற்படும் நிலையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில் பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்குமாறும், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்