ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட டக்ளஸ் அழைப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் - வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டம் சாதி, மத பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்குவதற்கும் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாடு கடுமையான நெருக்கடியில் இருந்தபோது, நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒட்டுமொத்த மக்களும் நன்றி கூற வேண்டும்” என்றார்.

