இலங்கையை மறுவகைப்படுத்தியது உலக வங்கி!
2025ஆம் ஆண்டில் 5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, உலக வங்கி இலங்கையை கீழ் நடுத்தர வருமான நிலையிலிருந்து உயர் நடுத்தர வருமான நாடாக மறுவகைப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்ட சமீபத்திய பேரியல் பொருளாதாரச் செயல்திறன் மற்றும் வளர்ச்சி உத்வேகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையை உயர் வருமான நிலைகளைக் கொண்ட பொருளாதாரங்களின் வரிசையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் வருமானம், உயர் நடுத்தர வருமானம், கீழ் நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் என உலக வங்கி நாடுகளை வகைப்படுத்த நான்கு வருமானப் பிரிவுகளைப் பயன்படுத்துகிறது.
பொருளாதார வளர்ச்சி
இந்த வகைப்படுத்தல் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன.

2025ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சி மீட்சியைத் தொடர்ந்து, இந்த உலகளாவிய கட்டமைப்பிற்குள் இலங்கையின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தர உயர்வானது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்