உலகில் முதல் முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஓநாய்!
உலகின் முதல் குளோனிங் ஓநாயை உருவாக்கி சினோஜீன் பயோடெக்னலாஜி என்ற சீன நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
குளோனிங் தொழில்நுட்பம் என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றோரு உயிரை உருவாக்குவதாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கலவி இல்லாமல் உருவாக்கப்படும் உயிர்கள் உருவாக்கப்படும். செம்மறி ஆடு தான் உலகில் முதன் முதலாக குளோனிங் செய்யப்பட்ட உயிரினம் ஆகும்.
இந்நிலையில் பெய்ஜிங் ஆய்வகத்தில் குளோனிங் முறையில் ஓநாய் ஒன்று பிறந்தது. கடந்த சூன் 10ஆம் திகதி பிறந்த இந்த ஓநாய், 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கை
ஆர்டிக் ஓநாயை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள நிறுவனம் மாயா என பெயரிட்டுள்ளது.
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் போலார்லேண்டுக்கு அனுப்பப்பட உள்ள மாயா, அங்கு மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
இந்த தொழில்நுட்பம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அழிந்து வரும் மற்றும் அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
