சீனாவில் பறக்கும் கார் தொழிற்சாலை! XPeng AeroHT நிறுவனத்தின் எதிர்கால திட்டம்
சீனாவின் மின்சார வாகன நிறுவனமான XPeng AeroHT நிறுவனம், உலகின் முதல் பெரிய அளவிலான பறக்கும் கார் தொழிற்சாலையை திறந்து உற்பத்தி பணிகளைத் தொடங்கியுள்ளது.
இது, மனிதர்களின் போக்குவரத்து வரலாற்றில் புதிய காலத்தை தொடங்கியுள்ள முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோ நகரின் ஹுவாங்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, XPeng நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான “Land Aircraft Carrier” எனப்படும் உற்பத்தியை வடிமைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Modular வடிவமைப்பு
“Land Aircraft Carrier” என்பது ஒரு மாடுலர் (Modular) வடிவமைப்பு கொண்ட வாகனம். இதில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன: ஆறு சக்கரங்களைக் கொண்ட தரை வாகன பகுதி, இது சாலையில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் பிரித்து இணைக்கக்கூடிய பறக்கும் பகுதி (eVTOL – electric vertical take-off and landing), செங்குத்தாக பறந்து தரையிறங்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டையும் இணைப்பதன் மூலம் ஒரு காரைப் போலவும், சிறிய விமானமாகவும் பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
XPeng நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் வணிக விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், பறக்கும் வாகனங்களுக்கு தேவையான அரசு சான்றிதழ்கள், விமானப் பாதுகாப்பு அனுமதி, மற்றும் சாலை-வான ஒருங்கிணைப்பு விதிகள் இன்னும் உருவாக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |