உலகின் முதலாவது கண் மாற்று சத்திரசிகிச்சை : பெருமிதம் கொள்ளும் வைத்தியர்கள்
இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி உச்ச நிலையை அடைந்துள்ளது, எண்ணிலடங்கா ஆய்வுகளும் புதுப்புது கண்டுபிடிப்புக்களும் நாளுக்கு நாள் அறிமுகமாகி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வரிசையில் மருத்துவத்துறையில் பல்வேறு சத்திரசிகிச்சை முறைகள் அறிமுகமாகி மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
அதன்படி, உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் இதுவரை இல்லாதவகையில் உலகில் முதன் முறையாக கண் மாற்று சத்திர சிகிச்சை நியூயோர்க் இல் இடம்பெற்றுள்ளது.
கண் மாற்று சத்திர சிகிச்சை
சாமான்யமாக பார்வைப்பிரச்சினை என்றால் கண்ணில் உள்ள விழிவெண் படலம் மாற்றப்பட்டு சத்திரசிகிச்சை நிகழ்த்தப்படுவது வழக்கம் அது அனைவரும் அறிந்ததும் கூட.
ஆனால் கண் மாற்று சத்திர சிகிச்சை என்பது இதிலிருந்து முற்றாக மாறுபட்டது மாத்திரமல்லாமல் ஆபத்தானதும் கூட.
ஏனென்றால் விழிவெண்படல மாற்றுச்சிகிச்சை மிகவும் நூதனமானது இழையங்கள் பொருந்த வேண்டும் குருதி ஓட்டம், அழுத்தம் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என அதில் பல நிபந்தனைகள் இருந்தன.
அவ்வாறிருக்கையில் கண் மாற்று சத்திர சிகிச்சையை அத்தனை இலகுவில் செய்து விட முடியாது அல்லவா.
இடது கண் அகற்றப்பட்டு
சத்திரசிகிச்சை நிபுணர்களின் இடைவிடாத ஆய்வுகளும் இதன் மேலுள்ள ஈர்ப்பும் இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு வழிவகுத்துள்ளது.
நியூயோர்கிலுள்ள NYU லாங்கோன் ஹெல்த் அறுவைசிகிச்சை நிபுணர்களால் உலகின் முதலாவது கண் மாற்று சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
ஆர்கன்சாஸின் ஹாட் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 46 வயதான ஜேம்ஸ் என்பவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டுள்ளது.
மின்கம்பி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஜேம்ஸ், வேலைத்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பெரும் உபாதைகளுக்கு உள்ளானார்.
இவரது முகம் நன்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவரது வலது கண் நன்கு தொழிற்பட்டு இடது கண் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரது இடது கண் அகற்றப்பட்டு கண் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுவே உலகின் முதலாவது கண் மாற்று சத்திரசிகிச்சையாகும்.
சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இடது கண் நன்கு தேறி வருகின்றதாகவும் இன்னும் பார்வை மற்றும் இமையசைத்தல் போன்ற செய்ககைகள் முழுமை பெறவில்லை என்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சத்திரசிகிச்சை மருத்துவத்துறை படைத்த சாதனை மாத்திரமல்லாமல் மருத்துவத்துறையின் முன்னேற்றப்பாதையின் ஓர் மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.