உலகில் மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா ! காரணம் இது தான்
மனிதன் தான் பயன்படுத்தும் பொருட்கள் தரமானதாகவும் விலையுயர்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வாழ்ந்து வருகிறான், அதனை நிறைவேற்றும் பொருட்டு தரமான விலையுயர்ந்த பொருட்களை தேடித் தேடி வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறான்.
இது ஒரு புறமிருக்க அவ்வாறு உயர் ரக பொருட்களை கண்கொண்டு பார்ப்பதே இங்கு பலரது வாழ்வில் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது, நிலைமை இவ்வாறு இருக்க இந்த உலகிலுள்ள விலையுயர்ந்த துணி எது என்று தெரியுமா.
அதன் சிறப்புக்கள் அது ஏன் விலையுயர்ந்ததாக இருக்கின்றது என்று தெரியுமா, அந்த காரணங்களை தெரிந்துகொள்வோம்.
செல்வந்தர்களின் ஆடை
தேவைகளில் மிகவும் முக்கியமான தேவை நாம் அணியும் ஆடை தான், அந்த வகையில் உலகில் மிகவும் விலையுயர்ந்த துணியாக கருதப்படுவது விக்குனா துணியாகும்.
இது குளிர் காலத்திற்கு ஏற்றதாக காணப்படுகிறது, இந்த விக்குனா துணி பல நூற்றாண்டுகளாக அரச குடும்ப மற்றும் செல்வந்தர்களின் ஆடைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த துணி ஆன்டி மலையில் காணப்டும் ஒட்டகமான விக்குனா எனும் மிருகத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அவற்றின் ரோமங்கள் மிகவும் இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
இந்த தோலில் இருந்து நெய்யப்படும் ஆடைகள் தான் விக்குனா ஆடைகள். 1960 இல் இந்த ஆடை கம்பளி ஆடை என அறிவிக்கப்பட்டன.
விலையுயர்ந்த துணி
இந்த மிருகம் உலகில் இருக்கும் ஆபத்தான மிருகங்களில் ஒன்றாகும். ஒரு மனிதனின் கோட் செய்வதென்றால் 35 விக்குனாக்களின் தோலை நாம் அகற்றி வேறாக்கி எடுக்க வெண்டும்.
இதனால் இத்தாலியில் 5,000 ஏக்கரில் விக்குனாக்களுக்கான சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோரோ பியானா நிறுவனம் தனது இணையத்தளத்தில் இந்த விக்குனாவால் செய்யப்பட்ட ஒரு ஜோடி காலுறைகளை சுமார் .80,000 ரூபாய்க்கும், ஒரு சட்டையை 4.23 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.
அதனால்தான் விக்குனா ஆடை உலகின் மிகவும் விலையுயர்ந்த துணியாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |