உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஐந்து சுனாமிகள் பற்றி தெரியுமா!
சுனாமி என்றாலே பேரழிவுதான், 2004 ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய சுனாமியால் வடக்கு-கிழக்கு மற்றும் தெற்கின் கரையோரங்களில் 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், அந்த இழப்பை இந்நாள் வரை மறக்க முடியாது.
இந்நிலையில், சுனாமியால் இலங்கையை விட மிகவும் மோசமாக பாதிப்படைந்த 5 நாடுகள் தொடர்பில் அறிந்துக் கொள்வோம்.
லிஸ்பன்
1755: பூகம்பமும் சுனாமியும் லிஸ்பனை முற்றிலுமாக அழித்தது. இதனால் லிஸ்பனில் மட்டும் 10,000 முதல் 100,000 பேர் வரை உயிரிழந்தனர், இது வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும்.
இத்தாலி
1783: இத்தாலியின் கலாப்ரியா பகுதியைத் தாக்கிய ஐந்து வலுவான பூகம்பங்களின் வரிசையாகும். அவற்றில் முதல் இரண்டு சுனாமிகளை உருவாக்கியது, இந்த சுனாமி பாதிப்பினால் இறப்பு எண்ணிக்கை 32,000 முதல் 50,000 பேர் வரையாக இருந்தது.
1908: மெசினா நிலநடுக்கம் மற்றும் சுனாமி தெற்கு இத்தாலியின் சிசிலி மற்றும் கலாப்ரியாவில் சுமார் 123,000 உயிர்களைக் பலி கொண்டது, இதனால் மெசினா மற்றும் ரெஜியோ கலாப்ரியாவின் முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டன.
சுமத்ரா, இந்தோனேசியா
2004: இந்த இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி ஆகியவை நவீன காலங்களில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.
14 நாடுகளில் 230,000 பேரைக் கொன்றது, மேலும், 30 மீட்டர் உயர அலைகளைக் கொண்டு வந்தது. இது இதுவரை பதிவுசெய்யப்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் ஆகும், இது மிக நீண்ட கால அளவைக் கொண்டது (8.3 முதல் 10 நிமிடங்கள்). அது மிகவும் வலுவாக இருந்ததால் முழு கிரகமும் அதிர்வுற்றது.
ஜப்பான்
2011: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் மதியம் 2.46 மணிக்கு 8.9 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தால் பெரும் சுனாமி ஏற்பட்டது.
அது உள்நாடு அளவில் பரவியது, சில இடங்களில், இந்த சுனாமி அலைகள் சுமார் 10 ஆயிரம் மீட்டர் அளவுக்கு உயர்ந்தது.
இதனால் முழு நகரங்களும் ஏறக்குறைய மறைந்துவிட்டன, உலகிலேயே சுனாமியின் மிக நீண்ட வரலாற்றை கொண்டது ஜப்பான் நாடு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |