உலகின் முதலாவது பணக்கார பிச்சைக்காரர் - மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...!
India
By pavan
இந்தியாவில் மும்பை நகரில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்குகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு சகோதரர், அவரது தந்தையுடன் வசித்து வருகிறார். இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு

சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 2 விடுதிகள் மும்பையில் சொந்தமாக உள்ளது. தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது.
அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபாய் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, மொத்தம் இவரது சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி