உலகின் மிகப்பெரிய இரண்டாவது இந்துக் கோயில் அமெரிக்காவில்!
இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய இரண்டாவது அக்ஷர்தாம் என்ற இந்துக் கோயில் ஒக்டோபர் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
இக்கோவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 12 ஆண்டுகளாக அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12,500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோயில் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் இருந்து 60 மைல்கள் தெற்கேயும், வோஷிங்டன் நகருக்கு 180 மைல் வடக்கேயும் அமைந்துள்ளது.
துணை கோவில்கள்
183 ஏக்கரில் பரந்த விரிந்துள்ள இந்த கோயில் பண்டைய இந்து வேதங்களின் படி வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன் கோயில் முழுவதும் 10 ஆயிரம் சிலைகள் மறறும் இந்திய இசை கருவிகள் மற்றும் நடன வடிவங்கள் செதுக்கப்பட்டு இந்திய கலாசாரத்தின் வடிவமைப்பை கொண்டுள்ளது.

மேலும் 12 துணை கோயில்கள், ஒன்பது ஷிகர்கள்(கோபுரங்கள்) மற்றும் ஒன்பது பிரமிடுஷிகர்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுமானத்தில் நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டது.
அலங்கார கற்கள்
பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல்,கிரீஸ், துருக்கி, இத்தாலியில் இருந்து பளிங்கு; இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரனைட்; இந்தியாவில் இருந்து மணற்கல் மற்றும் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிற அலங்கார கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீரைக் கொண்டுள்ளது.
அக்ஷர்தாம் ஒக்டோபர் 8 ஆம் திகதி BAPS ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக திறக்கப்படும். இது ஒக்டோபர் 18 முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்