நான் ஒரு அமைதித்தூதுவர் : தன்னைத்தானே புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்
“நான் அமைதியை ஏற்படுத்துகிறேன். என்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராக உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒரு உண்மையான அமைதி விரும்பி
“நான் ஒரு உண்மையான அமைதி விரும்பி. பல போர்களை நிறுத்தி மக்களின் உயிர்களைக் காத்துள்ளேன். இதுவே எனது வாழ்நாள் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதோடு, ஈரான் குறித்து பேசுகையில், “ட்ரம்ப் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும். அதாவது, மன்னிக்க வேண்டும், நான் ஹோர்முஸ் நீரிணையை பற்றி கூறினேன்” என்றார். அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது.
அமைதிக்கான நோபல் பரிசு
மேலும், நோபல் பரிசு குறித்து பேசிய அவர், “அமைதிக்கான நோபல் பரிசு எனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கும் கிடைப்பதில் அர்த்தமில்லை.

வேறு நபருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டாலும் எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அந்த பரிசைப் பெற்றவரே அதிர்ச்சியடைந்துவிட்டார். அவர் ஒரு அற்புதமான பெண்மணி ஆவார்” என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |