உலகக் கிண்ண தொடர் குறித்து இந்திய கிரிக்கட் அணித் தலைவர் வெளியிட்ட தகவல்
உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் அது குறித்து எந்தவொரு பதற்றமும் தமக்கு இல்லை என இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வெளிப்புற காரணிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை உலக கிண்ண தொடரானது, இந்தியாவில் நடைபெறுவது கூடுதல் அழுத்தமாக இல்லை எனவும், நிதானமாக செயற்படுவதும் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதும் தான் எனக்கு முக்கியம் என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு அணி

மேலும், இந்த தொடருக்காக சிறப்பான ஒரு அணித் தேர்வு செய்யப்படும். அணியில் இடம்பெறாத வீரர்களிடம் தான் தனிப்பட்ட முறையில் விளக்கமளிப்பேன்.
உலகக் கிண்ண அணியில் இடம்பெற முடியாவிட்டால் ஒரு வீரரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை தாம் அறிந்திருப்பதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.