உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு
World
Technology
By Sumithiran
அல்பேனியா-கிரேக்க எல்லையில் உள்ள ஒரு இருண்ட நிலத்தடி குகையில் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
1,140 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சிலந்தி வலை 110,000க்கும் மேற்பட்ட சிலந்திகளின் தாயகமாகக் கூறப்படுகிறது.
அதிக அளவு நச்சுத்தன்மை
இந்த குகை குறிப்பிடத்தக்க சூரிய ஒளியைப் பெறுவதில்லை, இதன் காரணமாக, அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன்-சல்பர் வாயு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

credit - bbc
இத்தகைய நிலைமைகளின் கீழ் இந்த மிகப்பெரிய சிலந்தி வலை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து அவர்கள் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டு வகையான சிலந்திகள்
இந்த சிலந்தி வலை குகையின் நுழைவாயிலிலிருந்து தோராயமாக 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால், இரண்டு வகையான சிலந்திகள் இங்கு வாழ்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்