தவறான முடிவுகளால் ஏற்படும் தலைகீழ் மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி
தவறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வர்த்தமானிகளை வெளியிடும் போது அவற்றை 'தலைகீழாக' மாற்ற வேண்டியுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களை தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமும் அவ்வாறானதே என அமைச்சர் தெரிவித்தார்.
மண்ணுக்கு தேவையான அளவு உரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், தேவையான அளவு இரசாயன உரத்தை மட்டுமே மண்ணில் சேர்ப்பதால் பாதிப்பு ஏற்படாது என்றும், அதிக அளவில் எதையும் கொடுப்பது தீமை விளைவிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
விவசாயிகள் அல்லது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் ஆளும் கட்சிக்குள் நடந்த விவாதத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பன்னிபிட்டிய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.