கடலில் மூழ்கத் தொடங்கியது பேர்ள் கப்பல்
colombo
drawing
x press pearl
By Sumithiran
தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பின்புறத்தில் நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து அது கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து பின் பகுதி நிலையிழந்து கடல் நீரில் மூழ்கிக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த கப்பலில் சேகரித்து வைக்கப்பட்ட எண்ணெய் கடலில் கலக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலங்கையின் வத்தளை திக்கோவிட்ட கடற்பரப்பில் இருந்து நீர்கொழும்பின் கப்புன்கொட கடற்பரப்பு வரை எண்ணெய் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்