இரண்டாக பிளவடையுமா எக்ஸ்பிரஸ் பேர்ள்? கடற்படைத் தளபதி தகவல்
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ள கப்பல் இரண்டாக பிளவடையும் ஆபத்து எதுவும் இல்லை என்று கடற்படைத் தளபதி நிஷாந்தா உலுகெதென்ன தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் தீ பரவியுள்ளமையால், கப்பல் இன்னும் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்திய கடலோர காவல்படை இலங்கை அதிகாரிகளுடன் கூட்டு தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.
தற்போது, கப்பலின் பின்புறம் உள்ள தங்கும் விடுதி பகுதிக்கு அருகில் மட்டுமே கடுமையான புகை காணப்படுவதாக உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
வான்வழி கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பவற்றின் அடிப்படையில் இதுவரை
கப்பலில் இருந்து எரிபொருள் கசிந்தமை உறுதியாகவில்லை என்றும் உயர்ஸ்தானிகரம்
குறிப்பிட்டுள்ளது.