இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள மஞ்சள் காமாலை தடுப்பூசிகள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
இலங்கைக்கு சுமார் 6 ஆயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வகையில், மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஆபிரிக்காவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகள்
இந்நிலையில், ஆபிரிக்கா நாடுகளுக்குச் செல்லும் அனைத்து இலங்கை பிரஜைகளும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், அந்நாடுகளுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் 5 ஆயிரம் இலங்கையர்கள் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதும் காத்திருப்பதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி