உருக்குலைந்து போன ஹவுதி அமைப்பு: யேமனில் பொழிந்த அமெரிக்க குண்டு மழை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நிர்வாகம் ஹவுதி அமைப்பின் உயர் ஏவுகணைத் தளபதி உட்பட முக்கிய உறுப்பினர்களை கொன்றதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் அவர்களின் தலைமை ஏவுகணை ஏவுதளம் உட்பட முக்கிய ஹவுத்தி தலைமையை அழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதன்போது, தாங்கள் ஹவுதி அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கிவிட்டதாகவும் அவர்களின் தகவல் தொடர்பு முனைகள், ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் சில நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மேல் பறக்கும் ட்ரோன் உற்பத்தி வசதிகளைக் கூட தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா பதிலடி
சமீபத்திய தாக்குதல்களில் ஒன்று ஏமன் தலைநகர் சனாவின் மேற்கு மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தைத் தாக்கியுள்ளதோடு, அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வணிக கப்பல் போக்குவரத்து மீதான ஹவுத்தி தாக்குதல்கள் மற்றும் செங்கடலில் "இஸ்ரேலிய" கப்பல்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள் தொடர்ந்தும் பத்தாவது நாளாக நடத்தப்பட்டுள்ளன.
ஹவுதி தாக்குதல்கள்
இதேவேளை, நவம்பர் 2023 முதல், ஹவுதிகள் வணிகக் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி, இரண்டை மூழ்கடித்து, நான்கு மாலுமிகளைக் கொன்றுள்ளனர்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் அவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தபோதிலும், எதுவும் வெற்றிகரமாகத் தாக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

