யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்தநிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையாக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி (President's Counsel) சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள 5 காணிகளை நியாயமற்ற முறையில் பெற்றுக் கொண்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |