இந்திய சார்பாளனும் அல்ல சீன சார்பாளனும் அல்ல : ரணில் வலியுறுத்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka
By Beulah
இலங்கையின் முன்னுரிமைகள் பல நாடுகளுக்கு புரியவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களுக்காக உறுதியாக நிற்கிறது என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை ஆதரவாளன்
“சில காலத்திற்கு முன்பு ஒருவர் என்னிடம் நான் இந்திய ஆதரவாளனா அல்லது சீன சார்புடையவனா என்று கேட்டார்.

நான் நிச்சயமாக இந்திய சார்பு இல்லை என்று சொன்னேன், மேலும் சீன சார்புடையவனும் அல்ல என்று கூறினேன்.
அப்படியானால் நீங்கள் நடுநிலை வகிக்கிறீர்களா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லை நான் நடுநிலைவாதி இல்லை, நான் இலங்கைக்கு ஆதரவானவன் என்று கூறினேன்” என்றார்.
ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கைகளைப் பின்பற்றி இருந்தால் இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் : ரணில் விக்ரமசிங்க
மரண அறிவித்தல்