யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்
யாழில் (Jaffna) குளமொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நேற்று (17.05.2024) யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
18 வயதான யுவதி
இதேவேளை, வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
