திருமணமாகி சில மாதங்களே ஆன இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துயர சம்பவம் நேற்று (17) புத்தளம் (Puttalam) - திலடியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு திருமணம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புத்தளம் திலாடிய பகுதியில் புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் காட்சியறை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
பலூன்களை ஊதப் பயன்படுத்தப்படும் மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்கனவே உயிரிழந்துளளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
