உழவு இயந்திரம் திடீரென தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Independent Writer
Courtesy: kapil
உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் குறித்த துயரச்சம்பவம் நேற்று(18) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் குறித்தநபர் தேவை நிமித்தம் உழவு இயந்திரத்தை செலுத்திச்சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்திடீர் என தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.
சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
விபத்தில் அதனை செலுத்திச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 1 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்