விறகு சேகரிக்க சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Rain
By Sumithiran
மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம், மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவில் கடும் மழை
இன்று(19) முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. மழைக்கு மத்தியிலும் இவர் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அவ்வேளையில் கடும் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி