தமிழர் பகுதியில் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்
வவுனியாவில் (Vavuniya) வயல்வெளியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா - தேவகுளம் பகுதியில் இருந்து இன்று (17) காலை குறித்த சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரால் மீட்பு
குறித்த சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை சடலத்தை அவதானித்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்