இலங்கை இளைஞர் யுவதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
சமூகத்தில் கூடுதலாக செயலில் உள்ளவர்கள் இளைஞர் யுவதிகளே. கல்வி, தொழில் என இவர்கள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே இளைஞர் யுவதிகள் முதலில் உங்களின் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும்.
இதற்காக தடுப்பூசி போடுவது கட்டாயமாகும் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) வலியுறுத்துகிறார்.
இந்த தடுப்பூசி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வைரஸ் தாக்கும் அபாயத்தை ஓரளவு குறைக்கிறது. மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தையும் குறைக்கிறது என ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
எனவே, இந்த தடுப்பூசியை அனைவரும் விரைவில் பெற வேண்டியது அவசியம், என்றார்.
தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், நாட்டின் மக்கள் தடுப்பூசி போட்டால் மட்டுமே ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் பெரிய குறைப்பை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.