மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
Sri Lanka Police
Mannar
Sri Lanka Railways
By Thulsi
மன்னாரில் (Mana) தொடருந்துக் கடவை அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் மன்னார் தோட்டக்காடு பகுதியில் இன்று (20.1.2024) அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் - ஜீவபுரம் பகுதியில் வசித்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவபுரம் பகுதியில் வசித்த பெண் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது
மரணம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி