போதைபொருள் குற்றச்சாட்டில் மலையக இளைஞர் கைது
மலையக பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் காவல் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, அவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்த போது பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள்
இந்தநிலையில், குறித்த இளைஞர் ரூபாய் 6,000 செலுத்தி ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையை மேற்கொண்ட ஹட்டன் காவல் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் தொலைப்பேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |