வவுனியாவில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
Vavuniya
Sri Lanka Police Investigation
Drugs
By Sathangani
வவுனியா (Vavuniya) - தாண்டிக்குளம் (Thandi Kulam) பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புளியங்குளம் (Puliyankulam) விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் திடீர் சோதனை ஒன்றை நடாத்தினர்.
இதன்போது தாண்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு (06) மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பரிசோதனை செய்தனர்.
போதைப்பொருள் மீட்பு
இதேவேளை சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5கிலோ 124 கிராம் உடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே இவ்வாறு போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவராவார்.
கைது செயப்பட்ட நபரை மேலதிக விசாரனைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்