ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய யாழ். மைந்தன் வியாஸ்காந்த்
Cricket
IPL 2024
By Sheron
2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் (vijayakanth viyaskanth) தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் (SRH) ஆகிய இரண்டு அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியிலே குறித்த விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பாக துடுப்பாட்டம் செய்த பிரப்சிம்ரன் சிங் இன் விக்கெட்டை இவர் 14.2 ஆவது ஓவரில் வீழ்த்தியுள்ளார்.
இரண்டாவது போட்டி
விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
இதேவேளை நடைபெறவுள்ள T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் உதிரி வீரராக வியாஸ்காந்த் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி