கிளிநொச்சியில் பயங்கரம் :கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணை
சம்பவ இடத்திலே சடலம் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழுக்களுக்கு இடையேயான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.