அனோஜனின் விடுதலைக்காக திருகோணமலையிலும் ஒன்றிணைந்த இளைஞர்கள்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20) திருகோணமலை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுடன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவுதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


