காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு: இளைஞன் கொலை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By pavan
இரத்தோட்டை - நிக்லோயாவத்த பிரதேசத்தில் காதல் விவகார தகராறில் இளைஞன் கொலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட 39 வயதுடைய நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரம்
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை இரத்தோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்