வெகுசன ஊடக அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்
இளைஞர் நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்ணுதாரணமாக இருக்க வேண்டும் என வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகபெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இதேவேளை இளைஞர் நாடாளுமன்ற விடயங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என ஊடகங்களிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தின் புலி, நரி, நாய் என ஒருவரையொருவர் திட்டுவதையும் மாகாணசபையின் சபை அமர்வுகளில் இரு கட்சிக்காரர்கள் தாக்கிக்கொள்வதையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதனை நான் வெளியிட வேண்டாம் என கூறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்களைக் ஊடகங்களில் வெளியிடுவதுபோல இளைஞர் நாடாளுமன்றத்தில் வடக்கு, தெற்கில் உள்ள இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு தொடர்பில் முன்வைக்கும் கருத்துக்களையும் ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு காண்பிக்கும்போதுதான் நாடாளுமன்றத்தில் உள்ள எங்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்.