'யுவான் வாங்' இராஜதந்திர சிக்கல் - இந்திய - சீன முரணா.! ரணில் வெளியிட்ட மறுப்பு
இராஜதந்திர சிக்கல்
சீன உளவுக் கப்பலான யுவான் வாங் - 5 இன் இலங்கை வருகையால் அண்மைய நாட்களில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தால் சீனா மற்றும் இந்தியத் தூதரகங்கள் இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு தூதரகங்களுக்கும் இடையிலான கருத்து மோதல் தொடர்பில் தாம் பதிலளிக்க விரும்பவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன முரண்

சீனக் கப்பலின் வருகையின் போது இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கின்றது என சீனத் தூதுவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு, சீனத் தூதுவர் இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவதாகவும், சீனா இலங்கையை கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாகவும் இந்தியா கடும் பதிலடி கொடுத்திருந்தது.
இதற்கு இலங்கையின் இறையாண்மை மீது இந்தியா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சீனா கடுமையாக பதிலளித்திருந்தது.
அதற்கு இந்தியா தனது கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.