காவல்துறையினரின் யுக்திய நடவடிக்கை தொடரும் : தேசபந்து தென்னக்கோன் தெரிவிப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை முல்லேரியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் நோக்கில் ஏழு மாதங்களுக்கு முன்னதாக யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
யுக்திய நடவடிக்கை
இதனையடுத்து பாதாள உலகக்குழு செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களும் பல்வேறு வழிகளில் சவால்களை கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இவ்வாறான சவால்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் காவல்துறை உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதன் மூலம் யுக்திய நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள்
இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படும் வரையில் ஓயப் போவதில்லை எனவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |