ரஷ்யாவுடன் மோதியிருக்க கூடாது ஜெலன்ஸ்கி : ட்ரம்ப் வெளிப்படை
ரஷ்யாவுடனான போரை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(volodumyr zelenskyy) தவிர்த்திருக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார்.
நேட்டோவில்(nato) இணைவது என்ற உக்ரைனின்(ukraine) முடிவுக்கு எதிராக அந்நாட்டின் மீது ரஷ்யா(russia) படையெடுத்தது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் பதிலடி
கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷ்யா முதலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது.
தொடர்ந்து போரானது 3-ம் ஆண்டு நிறைவை நோக்கி செல்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷ்யாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது வீணானது
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பொக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், ஜெலன்ஸ்கி மிக பெரிய, அதிக சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராக போரிட்டு வருகிறார். ரஷ்யாவின் ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது என்பது வீணானது. அதனை அவர் செய்திருக்க கூடாது.
போரை தவிர்க்க, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். அதனை நான் எளிதில் செய்து இருப்பேன் என்றார்.
இரு நாடுகளின் மோதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். எனினும், ரஷ்யா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும். பொருளாதார தடைகளையும் விதிக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |