அரச உயர் பதவிக்கு மற்றுமொரு ராஜபக்ச குடும்ப உறுப்பினர் நியமனம்
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக இருந்த இஷினி விக்கிரமசிங்கவுக்கு(Ishini Wickremasinghe) பதிலாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் நியமிக்கப்படவுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி செயலக சமூக ஊடக முன்னாள் தலைவர் ஷர்மிளா ராஜபக்ச(Sharmila Rajapaksa) அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார்.
ஷர்மிளா ராஜபக்ச ஜூன் 2020 இல் ஜனாதிபதியின் சமூக ஊடகத் தலைவரானார். பின்னர் அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
திருமதி ஷர்மிளா ராஜபக்சவின் நியமனம் 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நேற்று (19 ம் திகதி) மற்றும் இன்று (20 ம் திகதி) பொது விடுமுறையாதலால் நாளை (21 ம் திகதி) அமைச்சரவை அனுமதி அளிக்கும்.
தேசிய விலங்கியல் பூங்காவின் காவலில் இருந்த 14 யானைகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் பதிவு செய்வதற்காக விடுவித்த உத்தரவால் இஷினி விக்கிரமசிங்க அதிருப்தி அடைந்து அண்மையில் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.