நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 02 வயது குழந்தை பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
எல்பிட்டிய காவல்துறை பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானின் சில்லுகளில் காற்று இறங்கியதன் காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் வானில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயதான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த விபத்தில் கதிர்காமம் - வெடிஹிடிகந்த பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 02 மாத வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது
விபத்து இடம்பெற்ற போது வானில் சிறுவர்கள் உட்பட 12 பெரியவர்கள் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |