நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார்

Sri Lankan Tamils Government Of Sri Lanka
By Dharu Jul 06, 2026 11:31 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இருவாரமும் நாளை செவ்வாய்க்கிழமை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 1,000 தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படவுள்ள அதேவேளை, நாளை ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் முதற்கட்டமாக, இனங்காணப்பட்ட 100 தளங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

தொல்பொருள் தளங்கள்

தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு சமூக பாதுகாப்பு குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார் | 1 000 Archaeological Sites Islandwide

இந்தச் சமூக பாதுகாப்பு குழுக்களின் மூலம் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க,  ஜூலை மாதம் 7ஆம் திகதி தொல்பொருள் இருவாரம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை தொல்பொருள் இருவாரத்தின் முக்கிய கருப்பொருளாக 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' என்பதை பெயரிட்டுள்ளோம்.

இதன் மூலம் நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டு, அவற்றுள் பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய இடங்களுக்கான பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக, எதிர்வரும் காலத்தில் 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் முதன்மை வேலைத்திட்டத்தின் கீழ் தான் இந்த நடவடிக்கை தொடங்கப்படுகிறது.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

 100 இடங்கள்

ஜூலை 7ஆம் திகதி ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் தொடக்கப் பணியாக, அத்தகைய 100 இடங்களை இனங்கண்டு பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தத் தளங்கள் மீதான பொதுமக்களின் அர்ப்பணிப்பும் தலையீடும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாகவே இருப்பதை நாம் அவதானித்தோம்.

நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார் | 1 000 Archaeological Sites Islandwide

அந்த நிலையைக் கருத்திற்கொண்டு, தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டதும், அதனை ஒரு குறிப்பிட்ட தொல்பொருள் தளமாகப் பெயரிட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் சமூக பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தச் சமூக பாதுகாப்பு குழுவின் மூலமே, அதற்குப் பிறகு அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு அல்லது பாதுகாப்புப் பணிகள் செய்ய வேண்டுமா என்பது குறித்த ஆலோசனைகளும் கருத்துகளும் பெறப்படும். இவை தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அறிவுடைய அதிகாரிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்.  

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026