சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

Sri Lanka Police Sri Lanka Negombo Law and Order
By Shalini Balachandran Jul 06, 2026 01:07 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நிலையைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட விமானப்படை ஆளில்லா விமானம் (ட்ரோன்) சிறைக்கு உள்ளிருந்தே சுடப்பட்டுள்ளது.

சிறைக்குள் நிலைமையைக் கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மேற்கு மாகாண வடக்குப் பொறுப்பு பிரதிப் காவல்துறைமா அதிபர் கலிங்க ஜெயசிங்க மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் எரிக் பெரேரா ஆகியோர் நீர்கொழும்பு சிறைச்சாலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

துபாயிலிருந்து திட்டமிடப்பட்டதா...? நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தத்தில் நனைத்த மாபெரும் மோதல்

துபாயிலிருந்து திட்டமிடப்பட்டதா...? நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தத்தில் நனைத்த மாபெரும் மோதல்

விசேட அதிரடிப்படையினர் 

இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06-07-2026) காலை ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்பதில் விசேட அதிரடிப்படையினரும் மற்றும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் | Negombo Prison Hostage Crisis Airforce Drone

எனினும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்பதில் கடும் சிரமத்தையும் எதிர்ப்புகளையும் அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் நண்பகல் தாண்டிய நிலையிலும் சிறைச்சாலைக் கைதிகளில் ஒரு பிரிவினர் தொடர்ந்தும் தீவிர மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் அதேவேளை அவர்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி பல்வேறு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சொத்துக்கள் மீதான விசாரணை...! சிக்கபோகும் 30 முக்கிய அரசியல் புள்ளிகள்

சொத்துக்கள் மீதான விசாரணை...! சிக்கபோகும் 30 முக்கிய அரசியல் புள்ளிகள்

கடுமையான தாக்குதல்

மோதலில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் | Negombo Prison Hostage Crisis Airforce Drone

பதிலுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கைதிகள் மீது பதிலடித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காயமடைந்த நிலையில் இன்னும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்க விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

கைதிகளின் மோதல் 

இதற்கிடையே கைதிகளின் மோதல் குறித்த செய்திகள் வெளியானவுடன் அவர்களின் உறவினர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக ஒன்றுதிரண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி சிறைச்சாலைகள் ஆணையரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நிகழ்ந்த மோதல் தொடர்பாக ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் | Negombo Prison Hostage Crisis Airforce Drone

நேற்று (05-07-2026) கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இன்று காலை (06-07-2026) அவர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது மீண்டும் கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்ததாக சிறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போது கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கினர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026