மைத்திரிபாலவுக்கு ஆதரவாக போராட்டம் - பொதுமக்களிடம் பணம் சேகரித்த நடிகர்
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவுவதற்காக நடிகர் சுதத்த திலகசிறி இன்று பண சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்க கோரி முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு வியாழக்கிழமை (12) இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணம் சேகரிப்பு

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தனக்குப் பிரியமானவர்களிடம் இருந்து , இழப்பீடு வழங்குவதற்காக, அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள உதவுவதாக, சிறீசேனா தெரிவித்தார்.
அந்தவகையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவியாக நிதி சேகரிப்பதற்காக நடிகர் சுதத்த திலகசிறி இன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
சுதத்த திலகசிறி பொதுமக்களிடம் பணம் சேகரிப்பு செய்யும் வரையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார்.
நடிகர் இதனை நையாண்டியாக செய்துள்ளதாகத் தெரிகிறது, ஆனால் பின்னர் அவர் மைத்திரிபாலவை சந்தித்து பணத்தை கையளித்தார். (நியூஸ் வயர்)