கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களும் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்ப்பட்டனர்
அவர்களை யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் இன்று முற்படுத்தியபோது அனைவரையும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 11 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம்(2)கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை இவர்களை கைது செய்துள்ளது.
காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே 01 படகுடன் 11 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளது
கடற்றொழிலாளர்களை கைது செய்த கடற்படை
இலங்கை கடற்படை IND/PY/PK/MM/979 எனும் தொடரிலக்கத்தை கொண்ட படகையும் கடற்றொழிலாளர்களையும் கைது செய்த கடற்படை விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் கடற்றொழிலாளர்களை ஒப்படைக்கவுள்ளனர்

கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை நீர் பரப்பு எல்லைக்குள் அடங்கிய யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை , மேற்கூறிய அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களை(வலை)படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை ,
62 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில்
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை , போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீரியல் வளத்துறையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது மேலும் இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச சேர்ந்த 62 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப்படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 படகுடன் 355 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.
images - sri lanka navy
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |