110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி
மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார்.
முதலில் 16 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன் பிறகு 110 நாட்கள் உண்ணாவிரதம் நீடித்துள்ளது.
உண்ணாவிரதத்தை
3 மாதங்கள் 20 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரம் இருந்துள்ள சிறுமி வெறும் நீரை மட்டுமே பருகி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அச்சிறுமியின் குடும்பத்தினர் இதனை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கிரிஷா 16 நாட்கள் மட்டுமே உண்ணவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார் .
எனினும் 16 நாட்களில் உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
மன ஒருமைப்பாடு
இதனையடுத்து ஆன்மீக குருவான முனி பத்மகலாஷ் மகராஜிடம் அனுமதி பெற்று உண்ணாவிரத்தை 26 நாட்களாக நீடித்துள்ளார்.
அவ்வாறே நாட்கள் நீட்டித்து 110 நாட்களை கடந்துள்ளார். இது பற்றி சிறுமி கிரிஷா தெரிவிக்கையில், ''உண்ணாவிரதத்தின் போது மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தினேன்.
மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். மூன்று மாதங்களில், சுமார் 18 கிலோ எடை குறைந்துள்ளேன்.'' என தெரிவித்தார்.
இது போன்று சில பக்தர்கள் முன்னைய நாட்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தாலும் முன் அனுபவம் இல்லாத இச் சிறுமியின் சாதனை எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.