12 வயது மாணவிக்கு நேரந்த கொடூரம் : பாடசாலை அதிபர் எடுத்த உடனடி நடவடிக்கை
12 வயதே ஆன பாடசாலை மாணவி ஒருவர் தாயின் இரண்டாவது கணவரால் தகாதமுறைக்கு உட்படுத்தபட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஹியங்கனை, கெசல்பொத்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில்
மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாது என அதிபரிடம் தெரிவித்ததையடுத்து இது தொடர்பில் பாடசாலை அதிபர் மஹியங்கனை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய பாடசாலைக்கு சென்ற அதிகாரிகளால் சிறுமியை மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதனைக்குட்படுத்தினர்.
மாணவி பல தடவைகள் தகாத முறைக்கு
இதன்போது மாணவி பல தடவைகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கெசல்பொத்த, மாபாக்கடையில் வசிக்கும் 48 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் தாயும், தாயின் இரண்டாவது கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 23 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்