13 எதிர்ப்பிலிருந்து பின்வாங்கும் மகாநாயக்க தேரர்கள்
13th amendment
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
By Sumithiran
13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தமக்கு தகவல் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மகாநாயக்கர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு அறிவித்ததையடுத்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களை நேரில் சென்று அது பற்றி விளக்கமளித்ததாகவும் அவர்கள் அதனை எதிர்க்கவில்லை என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அந்தத் திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 20 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்