லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு...!
புதிய இணைப்பு
மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
லிட்ரோ எரிவாயு புதிய விலை திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லிட்ரோகாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடர்பான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக பெரியளவில் மாற்றப்படவில்லை.
விலை திருத்தம்
இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஒக்டோபர் 2025 வரை எந்த விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்தோடு, அண்மைய விலை திருத்தம் (அதிகரிப்பு) ஜூலை 2025 இற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் நேற்று (01) நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 11 மணி நேரம் முன்