இந்தியாவை பற்றி பிடியுங்கள்! ஜனாதிபதியிடம் கோரிக்கை
நேசக்கரம் நீட்டி,சமாதானத்துடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பு வருகின்ற போதே நாம் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு இடர்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது என்றும், இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வெளிவிவகார அமைச்சர்
“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
பழைய முறைப்படி இத்தேர்தலை நடத்தி , எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கும் கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்த போது இந்தியா தனது காலை பதித்தது. இயற்கை அனர்த்தத்தின் போதும் மக்கள் தவித்த போது இந்தியா முதன் முதலாக தனது காலை பதித்துள்ளது.
ஒரு வாய்ப்பு
இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதியிடம் ,குறிப்பாக நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்தேன். இலங்கைக்கு அண்மையிலுள்ள நாடு இந்தியாவை பற்றி பிடியுங்கள் என்று.
நேசக்கரம் நீட்டி,சமாதானத்துடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பு வருகின்ற போதே நாம் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் கூறி இருந்தோம்” என்றார்.
செய்தி - நயன்